வலங்கைமானில் கர்நாடகா அரசை கண்டித்து கடையடைப்பு செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 October 2023

வலங்கைமானில் கர்நாடகா அரசை கண்டித்து கடையடைப்பு செய்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு காவேரி மேலாண்மை ஆணைய தீர்ப்பை மதிக்காமல் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசையும் ஒன்றிய அரசையும் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் காவேரி படுகைகள் பாதுகாப்பு  கூட்டு இயக்கம் சார்பில் கடையடைப்பு போராட்டமும் தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டமும் நடைபெற்றது. 

வலங்கைமான் மற்றும்  சுற்று வட்டார பகுதிகளில்  காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டனர். மகாமாரியம்மன் ஆலயத்திலிருந்து வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன் தலைமையில்,  திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவனேசன், வலங்கைமான் வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, வலங்கைமான் சிபிஐ  கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார், விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் பி .சின்ன ராஜா, சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் இளங்கோவன், மதிமுக ஒன்றிய செயலாளர் ஜா. பிரதாப்,ச.ம. க. திருவாரூர்  மாவட்ட செயலாளர் சோ. காளிமுத்து, விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் ராதா, மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி மாவட்ட செயலாளர்  பி.ஏ.எஸ். ரஹமத் அலி, திக ஒன்றிய செயலாளர் பெரியார் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் கரகோஷம் எழுப்பியவாரு ஊருவலமாக சென்று கும்பகோணம் சாலை, கடைவீதி வழியாக   தபால் நிலையத்தை நிறைவடைந்தது  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மத சார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், விவசாயிகளும், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad