நிகழ்ச்சியில் திருச்சி எஸ். ஆர் .எம். கல்லூரி பேராசிரியர் கண்ணன் சிறப்புரையாற்றினார், இப்பள்ளியின் முன்னாள் கலையாசிரியர் செல்வராசன் தான் வரைந்த பாரதியார் படத்தை பள்ளிக்கு வழங்கினார். "சோழ மண்ணில் தமிழ் வளர்ச்சி" என்ற தலைப்பில், கும்பகோணம் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவரும், திண்டிவனம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வரும், குடந்தைத் தமிழ் பேரவை நிறுவனரும் ஆன முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி விழா பேருரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அ.ம. சத்தியமூர்த்தி சோழ நாடு எனப்படுவது தஞ்சை, திருச்சி, தென்னார்காடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது என்றார். சங்க இலக்கியத்தில் உள்ள 2381 பாடல்களை 473 புலவர்கள் வாடி உள்ளனர். அவர்களில் 55 பேர் சோழ நாட்டை சேர்ந்தவர்கள், ஆடுதுறை மசாத்துவனார், ஆலங்குடி வங்கனார், ஆவூர் ககிழரர் போன்றோர் அவர்களில் சிலர் பட்டினப்பாலையில் காவேரியின் சிறப்பும், சோழ நாட்டின் சிறப்பும் கூறப்பட்டுள்ளது.
பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருமுறை பாடிய சம்பந்தர், ஒன்பதாம் திருமுறையில் ஆறு புலவர்கள்கள், பத்தாம் திருமுறை பாடிய திருமூலர் என பலரும் சோழ நாட்டை சேர்ந்தவர்கள். பெரிய புராணம் குலோத்துங்க சோழன் வேண்டுகோளுக்கு இணங்க பாடப்பட்டது. கம்பர் சோழ நாட்டை சேர்ந்தவர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தீ. ஜானகிராமன், மறைமலை அடிகள் என சோழ நாட்டில் தமிழ் வளர்த்தோர் பட்டியல் நீண்டது என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தமிழ் ஆசிரியை கனகாம்பிகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், உதவி தலைமையாசிரியை வனிதா செந்தில் ராஐ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியை முனைவர் இரா லலிதா சிறப்பாக செய்திருந்தார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment