கர்நாடகா அரசை கண்டித்து கடை அடைத்து அனைத்து கட்சியினர் போராட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 11 October 2023

கர்நாடகா அரசை கண்டித்து கடை அடைத்து அனைத்து கட்சியினர் போராட்டம்.


உச்சநீதி மன்ற இறுதித் தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி மன்னார்குடி அருகே கோட்டூரில் காவிரி படுகை கூட்டு இயக்கத்தினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு 1000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு கண்டித்து,  காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு அழுத்தம் தராத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காவிரி கூட்டு இயக்கம் சார்பில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் முழு கடையடைப்பு,  மறியல் போராட்டம்  நடைபெற்று வருகிறது .


அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கோட்டூரில்   தலைமை தபால் அலுவலகம் முன்பு சி,பி.ஐ, சி.பி.எம் திமுக , மதிமுக, திக, விடுதலை சிறுத்தை கட்சிகள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது  காவிரியில் உச்சநீதிமன்ற உத்தரவு படியும்  காவிரி மேலாண்மை வாரிய ஆணை படியும் காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து  காவிரியில்  தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு அழுத்தம் தராத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி  தபால் நிலையத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில்  வை. சிவபுண்ணியம் முன்னாள் MLA. தேசியக் குழு உறுப்பினர்,  ஏ.கே.எஸ். விஜயன் முன்னாள் M.P, டெல்லி சிறப்பு பிரதிநிதி மாநில விவசாய அணி செயலாளர், மற்றும் தலையாமங்கலம் பாலு மாவட்ட ஊராட்சி தலைவர் ஆகியவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள்.


இதில் பால.ஞானவேல் திமுக. ஒன்றிய செயலாளர் வடக்கு, எம். செந்தில்நாதன் சிபிஐ. ஒன்றியசெயலாார், என். மணிமேகலை. ஒன்றியப்பெருந்தலைவர், சமுதாயம் செல்வராஜ் காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர், சண்முகவேல் சிபிம் ஒன்றிய செயலாளர், சேரி எம். ராகேந்திரன் மதிமுக, வி. முருகையன். விசி.க, வி. புஷ்பநாதன். தி.க, பி. சௌந்தராஜன் விவசாய சங்கம் ஒன்றிய செயலாளர், கே.எம். அறிவுடைநம்பி விவசாய சங்கம் ஒன்றிய தலைவர், இ.மஞ்சுளா மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad