உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக் கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்து தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இன்று காவிரி படுகை கூட்டு இயக்கத்தினர் காவிரி படுகை மாவட்டங்களில் முழு கடையடைத்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் , வடுவூர், உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகளை அடைத்து வர்த்தக சங்கம், மற்றும் வணிகர் சங்கம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment