திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கடந்த 1997 ஆம் ஆண்டு உள்ளிக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் மீது பரவாக்கோட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த நிலையில் கடந்த 2003 ஆண்டு பாலையன் மகன் செல்லப்பாண்டியன் 44 சிங்கப்பூர் சென்றுள்ளார்.
இந்த நிலையில் 20ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நேற்று நாடு திரும்பினார். அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து செல்லப்பாண்டியனை சிறையில் அடைத்தனர். கொலை முயற்சி வழக்கில் வெளிநாடு தப்பி சென்று 20 ஆண்டுகள் பின்னர் போலீசார் கைதுசெய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment