ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேலு இல்லத்திற்கே சென்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கௌரவிப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 October 2023

ஆசிய விளையாட்டுப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பிரவீன் சித்திரவேலு இல்லத்திற்கே சென்று முன்னாள் அமைச்சர் காமராஜ் கௌரவிப்பு.


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே செட்டிசத்திரம்  பெரியார் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை சித்ரவேல்  கபடி வீரர்  தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் பிரவின் சித்ரவேல்  19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷோ  நகரில் நடைபெற்றது.  

இப்போட்டிகளில் தடகளத்தில் டிரிபிள் ஜம்ப் பிரிவீன் இறுதி சுற்று போட்டியில், 17. 13 மீட்டர் தாண்டி சீன வீரர் தங்கப்பதக்கத்தையும், 16. 93 மீட்டர் தாண்டி மற்றொரு சீன வீரர் வெள்ளி பத்தகத்தையும், 16.68 மீட்டர் தாண்டி இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக  வீரர் பிரவீன் சித்ரவேல் வெண்கல பதக்கத்தையும் வென்று சொந்த ஊர்  திரும்பிய இவருக்கு  கிராம பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்நிலையில் பிரவின் சித்ரவேலுவை சொந்த ஊரான செட்டி சத்திரத்தில் உள்ள வீட்டிற்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் சென்று சால்வை மற்றும் மாலை அணிவித்து பரிசளித்து கௌரவித்தார், பிரவீன் சித்ரவேலுவை அடுத்தமுறை ஒலிம்பிக்போட்டியில் தங்கபதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும், பிறந்த ஊருக்கும்  பெருமை சேர்க்கும்படி கூறினார்.  


அதனை தொடர்ந்து அவரின் பெற்றோர்களுக்கும் மரியாதை செய்தார். முன்னாள் அமைச்சர் தங்களது இல்லம் தேடி வந்து கௌரவித்ததற்கு பெற்றோர்களும் உறவினர்களும் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad