குறிப்பாக விவசாயிகளின் பாதுகாவலராக திகழ்ந்து வருகிறார். எந்த பகுதியில் இருந்தும் விவசாயிகள் அவரை அணுகினால் அவரால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தன் துறை சாரா உதவிகளாக இருந்தாலும் கூட சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் மூலம் செய்து கொடுக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுபவர்.


கடலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் தன் உயிரை பணையம் வைத்து மக்களை காக்க உழைப்பவர். அதனால் தமிழ்நாடு மக்களின் இதயங்களில் நீங்க இடத்தை பிடித்துள்ளார். எந்த நேரமும் அவரை கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசமுடியும், குறைகளை எடுத்துரைத்து தீர்வு காணவும் முடியும். எளிமையாகவும் இண்முகத்தோடும் பழகும் குணமுடையவர். உதவும் மனம் படைத்தவர். மனிதநேயத்தோடு மக்கள் பிரச்சனைகளை அணுகக்கூடிய பண்பாளர். ஜாதி மத இன உணர்வுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். தமிழரோடு தமிழராய் இணைந்து செயல்படும் பண்முக தன்மை கொண்ட உணர்வாளர்.
தான் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகளுக்கு மெருகூட்டும் வகையில் செயல்படுவது மட்டுமின்றி, ஆட்சியாளர்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்றவராக திகழ்பவர். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தனக்கு கிடைக்கும் பொறுப்பினை வைத்து அனைவருக்கும் உதவிட வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு செயல்படுவதை அடிப்படை கொள்கையாக கொண்டவர்.
அன்பும் கண்டிப்பும் மிக்க இவர், சுறுசுறுப்புடன் பம்பரம் போல் சுழன்று பணியாற்றும் துடிப்புமிக்க செயல் வீரர். இவர் மீது ஈரோட்டில் தற்போது துணை ஆட்சியாட்சியராக பணிபுரியும் மனிஷ்தான்வாரே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை யாரோ தூண்டுதலின் பேரில் பொறாமை குணம்படைத்தவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகிள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்களின் நம்பிக்கையை பெற்று செயல்படும் அதிகாரிகளை தமிழ்நாடு முதலமைச்சரும் ஊக்கப்படுத்தி வரும் நிலையில், பொறாமை குணம் கொண்டு எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளால் அர்ப்பணிப்புடன் செயல்படும் அதிகாரிகளின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டை திரும்ப பெறுவதோடு ககன்தீப்சிங்பேடி அவர்கள் மீதான களங்கத்தை துடைத்தெறிய வேண்டும் என தெரிவித்தார்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment