திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நாராயணபுரம் களப்பால் ஆற்றங்கரை தெரு பகுதியில் நீர் நிலை புறம்போக்கு இடத்தில் கடந்த 80 ஆண்டுகளாக 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


நீர்நிலை புறம்போக்கில் வசித்து வரும் காரணமாக அரசு வழங்கக்கூடிய இலவச வீடு கட்டும் திட்டத்தில் இவர்கள் வீடு கட்ட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது எனவே இவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு சாலையில் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த களப்பால் காவல்துறையினர் மற்றும் முத்துப்பேட்டை டிஎஸ்பி விவேகானந்தன் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதின் காரணமாக தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது, இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக திருத்துறைப்பூண்டி வேதபுரம் சாலையில் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment