மாற்றுத் திறனாளிகள் சுயம்வரம் நேர்காணல் நிகழ்ச்சி தொடர்பான கலந்த ஆலோசனை கூட்டம் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் வீரசிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் வீரசிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது மாற்றுத்திறனாளிகளும் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த சுயம்வரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு வாழ்வளிக்க விரும்பும் நல்ல நிலையில் இருப்போர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறலாம். பங்குபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகளுடன் திருமணம் செய்து வைக்கப்படும்.
நேர்காணலில் பங்கு பெற பலரும் முன்பதிவு செய்து இருக்கின்றனர். முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் போது நேரடியாக வந்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும். , மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதற்கு வங்கி கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டும். அரசு மாற்றுத்திறனாளி மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததனர்.
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment