மன்னார்குடியில் தென்னிந்திய அளவிலான இரண்டு நாட்கள் ஜூனியர் கால்பந்து போட்டிகள் தொடங்கி இறுதி போட்டிகள் நாளை மாலை நடைபெற உள்ளது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 May 2023

மன்னார்குடியில் தென்னிந்திய அளவிலான இரண்டு நாட்கள் ஜூனியர் கால்பந்து போட்டிகள் தொடங்கி இறுதி போட்டிகள் நாளை மாலை நடைபெற உள்ளது.


மன்னை ஸ்டார் கால்பந்து கழகம் சார்பில் தென்னிந்திய அளவிலான இரண்டு நாள் ஜூனியர் கால்பந்து போட்டிகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று தொடங்கியது. பின்லே பள்ளி மைதானத்தில் 25-வது ஆண்டாக நடைபெறும் கால்பந்து போட்டியில் கேரளா,பாண்டிச்சேரி, பெங்களூரூ, மற்றும் தஞ்சை, நாகை, திருச்சி நெய்வேலி, கடலூர் உள்ளிட்ட  மாவட்டங்களை சேர்ந்த 40 கால்பந்து அணிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்.


இப்போட்டிகளை ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள்  கண்டு களித்து வருகின்றனர். 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு, 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் என  தனித்தனியாக போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதலில் மன்னார்குடி ஸ்டார் கால்பந்து அணியும் தஞ்சை கண்ணை ஸ்போட்ஸ் அக்கடமி அணியும் மோதின. இப்போட்டிகளை மன்னார்குடி  பின்லே மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டேன்லி  துவங்கி வைத்தார்.

பல்வேறு சுற்றுகள் நடைபெற்று நாளை கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நாளை மாலை நடைபெற உள்ளது.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad