திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே திருப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் மகன் ஹரி.(வயது 17) இவர் 12ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு கூலி வேலைக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நிலையில் கோட்டூர் அருகே சோழங்கநல்லூரரில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்காக மின்விளக்கு போடும் பணிக்கு சென்றுள்ளார். நேற்று பெய்த மழை காரணமாக மழைநீர் சேற்றில் மின்சார ஒயர் அறுந்து கீழே விழுந்துள்ளது. இதனை அறியாமல் அதில் கால் வைத்த ஹரி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோட்டூர் போலீசார் ஹரியின் உடலை கைப்பற்றி மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒரு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment