திருவாரூர் அருகே உரிமையாளருக்கு தெரியாமல் மோசடியாக அடகு வைக்கப்பட்ட சரக்கு வாகனத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியர் காரை மறிக்க முயன்றதால் பரபரப்பு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 2 May 2023

திருவாரூர் அருகே உரிமையாளருக்கு தெரியாமல் மோசடியாக அடகு வைக்கப்பட்ட சரக்கு வாகனத்தை மீட்டு தரக் கோரி மாவட்ட ஆட்சியர் காரை மறிக்க முயன்றதால் பரபரப்பு.


திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே கொத்தவாசல் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் டேவிட். இவர் தவணை முறையில் சரக்கு வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். வாகனம் வாங்கும் அவரது நண்பர் சுதாகரன் உதவியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் டேவிட் வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வாகனத்தை சுதாகரன் எடுத்து சென்று அடகு வைத்துள்ளர். வெளியூரில் இருந்து திருப்பிய டேவிட், வாகனம் குறித்து சுதாகரனிடம் கேட்டபோது, வாகனம் அடகு வைக்கப்பட்டது தெரியவந்தது.


இதுகுறித்து டேவிட் அளித்த புகாரில் பேரளம் போலீஸார் சரக்கு வாகனத்தை அடகு வைத்த சுதாகரன், அடகு பெற்ற மணிகண்டன் மற்றும் மோகன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை சரக்கு வாகனத்தை போலீஸார் மீட்டுத் தரவில்லை.


இதனால் தனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் காரை தடுத்து நிறுத்தி கோரிக்கை கூற முயன்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் கார் நிற்காமல் சென்றது.


தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டேவிட் குடும்பத்தினர், வாகனத்தை மீட்டுத் தரக் கோரி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


- செய்தியாளர் ரா.பிரியங்கா

No comments:

Post a Comment

Post Top Ad