மேல்வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மதியம் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது.

குறிப்பாக திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கண்கொடுத்தவணிதம், விளமல், கொரடாச்சேரி, வண்டாம்பாளை, முகுந்தனூர், குளிக்கரை, தண்டலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலைவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment