மே 1ந் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கட்டிட தொழிலாளர் மத்திய சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர் இந்த பேரணியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியானது லெட்சுமாங்குடி பாலத்தில் தொடங்கி கூத்தாநல்லூர் கடைத்தெரு வழியாக சென்று பண்டுதக்குடி என்ற இடத்தில் முடிவடைந்தது அப்போது தொழிலாளர்கள் 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த கூடாது என தமிழக அரசை கேட்டு முழக்கங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர் .
-செய்தியாளர்: தருண்சுரேஷ்
No comments:
Post a Comment