திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை கிராமத்தில் ஸ்ரீ வீழிநாதர் ஆலயத்தில் சித்திரை மாத மஹோற்ட்சவத்தின் ஒரு பகுதியாக இன்று திருத் தேரோட்டம் நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் சுவாமியும் அம்பாளும் புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளையும் பக்தர்கள் தேர் இழுத்து வழிபட்டனர்.

அந்த தேரின் இரண்டு தேர்சக்கரங்களுக்கு இளம் பெண்மணி முட்டுக்கட்டை போட்டு தேரோட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்த தேர் முட்டுக்கட்டை போடுவது இதுவரை ஆண் தேரோட்டிகள் மட்டுமே ஓட்டி வந்த நிலையில் இந்த பெண்மணி தேர்சக்கரங்களில் முட்டுக்கட்டை போட்டு தேரோட்டுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது .இந்த நிகழ்ச்சியினை குரு மகா சன்னிதானம் இன்று காலை தேரோட்டத்தை துவக்கி வைத்து பக்தர்கள் ஆரவாரத்துடன் தேர்இழுத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா.
No comments:
Post a Comment