அப்போது மன்னார்குடிக்கு பெரும் பெரிய பெருமை உண்டு அதிமுகவாக இருந்தாலும் சரி இல்லை திமுக அரசியலுக்கு அடித்தலமாக விளங்குகிறது . ஜாதி மதம் இல்லாத ஒரு கட்சியியினா அது தேமுதிக தான், லஞ்சம், ஊழலை ஒழிப்பது தான் நமது கட்சி . லஞ்சம் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என தொடர்ந்து குரல் எழுப்பியவர் கேப்டன் ஒருவர் தான் பெண்களை பார்த்து தாய் குலங்கள் பாதிக்கப்படாத வகையில் ரேஷன் பொருட்கள் இல்லம் தேடி வரும் என சொன்னவர் கேப்டன்.
தேர்தல் வாக்குறுதிகளை இதுவரையிலும் நிறைவேற்ற வில்லை தஞ்சை நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகளை தூரிதபடுத்தவில்லை முதல்வர் ஸ்டாலின் நானும் டெல்டா காரன் என சொல்வி வருகிறார் நீங்கள் டெல்டா மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள் . நீடாமங்கலம் ரயில்வே கேட் நிலை நாளுக்கு நாள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது வரையிலும் மேம்பால பணிகளை நிறைவேற்றவில்லை. டெல்டா மாவட்டத்தில் ஆறு வாய்க்கால் தூர் வாரும் பணிகளை தொடங்கி கடைமடை வரையிலும் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள் ஆனால் விளை நிலைத்தை திமுகவினர் வீட்டுமனையாக்கி வருகிறார்கள் மிகவும் வேதனையாக இருக்கிறது .
மரக்காணம் பகுதியில் கள்ள சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்ததும் 50 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கஞ்சா டாஸ்மாக் மதுபானம் தானியங்கி மது இயந்திரம் இருந்த நிலையில் தற்போது கள்ள சாராயம் என ஒட்டுமொத்த தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றியுள்ளது திமுக அரசு இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
கடந்த ஆட்சியில் குடி பழக்கத்தால் விதவைகள் அதிகரிப்பதாக கனிமொழி தெரிவித்தார்.ஆனால் திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவந்தது போல் மது, கஞ்சா, உள்ளிட்டவற்றை உடனடியாக ஒழிக்க வேண்டியது திமுக அரசின் வேலை.
கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது திமுக அரசின் தவறை மறைக்கும் செயல். கள்ளசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வழங்கியதை
தேமுதிக கண்டிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் வேண்டும் . அப்போது தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்ச ரூபாய் வழங்குவதை தேமுதிக கண்டிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .
-செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment