இஸ்லாத்தில் பெண் அடிமைத்தனம் இல்லை திரைப்படங்கள் தவறாக சித்தரிக்கிறது என கூத்தாநல்லூரில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு . - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 13 May 2023

இஸ்லாத்தில் பெண் அடிமைத்தனம் இல்லை திரைப்படங்கள் தவறாக சித்தரிக்கிறது என கூத்தாநல்லூரில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத் செயல் வீரர்கள் கூட்டத்தில் குற்றச்சாட்டு .


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் கூத்தாநல்லூரில் மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் செயல் வீராங்கனைகள் கூட்டம் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தலைமையில்  நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைப் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாநிலச் செயலாளர் நெல்லை பைசல் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாநில துணைப் பொதுச் செயலாளர் தஞ்சை முஜிபுர் ரஹ்மான் கூறியதாவது... சமீபத்தில் திரையரங்குகளில் மற்றும் ஓடிடியில் வெளியான கேரளா ஸ்டோரி, பர்கானா ,மற்றும் புர்கா போன்ற திரைப்படங்கள், இஸ்லாமியர்களின் நம்பிக்கையையும் இஸ்லாமிய பெண்களுக்கு எதிராக தவறான கருத்துகளையும் திரைப்படத்தில் கூறப்பட்டிருக்கின்றது.

மத நல்லிணக்கத்தை கெடுக்கும் இத்தகைய திரைப்படங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.  போராட்டங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம் என்ற தலைப்பில் ஒரு மாத காலம் தொடர் பிரச்சாரம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு சாமானியர்கள் மத்தியில் இத்தகைய பிரச்சாரங்கள் மூலம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றது  என்றார் . 


- செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad