மன்னார்குடியில் அரசு கல்லூரியில் 1993-96 ஆண்டு படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கல்லூரி கலையரங்கத்திற்கு ரூ 50 ஆயிரம் மதிப்பிலான ஏசி வழங்கினார்கள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 21 May 2023

மன்னார்குடியில் அரசு கல்லூரியில் 1993-96 ஆண்டு படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் கல்லூரி கலையரங்கத்திற்கு ரூ 50 ஆயிரம் மதிப்பிலான ஏசி வழங்கினார்கள்.


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை  ராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் 1993-1996   ஆண்டுகளில் படித்த பழைய மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 1993-1996    ஆண்டுகளில் படித்த பழைய மாணவர்கள் அரசு,  தனியார் துறை மற்றும் வெளிநாடுகளில்  பணியாற்றி வருகின்றனர். இவர்கள்  வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்த மாணவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் 1993-1996    ஆண்டுகளில்  பணியாற்றிய பேராசிரியர்கள் அண்ணாமலை, இருளப்பன், துரைராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 


அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நல் மனிதர் விருது வாங்கிய  நேசக்கரம் சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் கெளரவிக்கப்பட்டார் அப்போது கல்லூரி கலையரங்கத்திற்கு பழைய கல்லூரி  மாணவர்கள் சார்பில் ரூ 50 ஆயிரம் மதிப்பிலான ஏசியை  பேராசிரியர்களிடம் வழங்கினார்கள் .  


பின்னர் பேசிய பழைய மாணவர்கள்  கல்லூரிக்கு  அடிப்படையான தேவைகளை செய்வதாகவும் , கல்லூரி வளர்ச்சிக்கு புதிய பாடப்பிரிவுகள் கொண்டு வருவதற்கு இந்த பழைய மாணவர் குழு தொடர்ந்து முயற்சி எடுக்கும் ,  தங்களால் இயன்ற உதவிகளை செய்து கல்வியில் சிறந்த கல்லூரியாக மன்னை இராஜகோபால சுவாமி கலைக்கல்லூரியாக  கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad