இதற்கான டெண்டர் அறிவிப்பை தொடர்ந்து ஜெஎம்.டோர் பேலஸ் என்ற நிறுவனம் ஒப்பந்த புள்ளிக்கு செலுத்த வேண்டிய முன் வைப்பு தொகை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கான டிடியை கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் என்கிற பெயரில் எடுத்துக்கொண்டு திங்கட்கிழமை அன்று காலை கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற போது டிடி மற்றும் டெண்டர் தொகையை மேற்படி நிறுவனத்தைச் சேர்ந்த நபரின் டிடியை பெறாமல் திருப்பி அனுப்பியுள்ளனர்.


இதனால் அதிர்ச்சியடைந்த ஜெ எம்.டோர் பேலஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் நிலாஸ் அலி கூறியதாவது, கூத்தாநல்லூர் நகராட்சியில் பழைய கட்டிடத்தை அகற்றுவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதன் அடிப்படையில் முன்வைப்புத் தொகை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் டிடியுடன் கட்ட சென்றதாகவும், அதனை பெற்று கொள்ளாமல் அலைக்கழித்த அதிகாரிகள், நகராட்சி ஆணையர், சேர்மன் மற்றும் கவுன்சிலர் உள்ளிட்ட பலர் உள்ளூர் காரர்களிடம் மட்டுமே டெண்டர் பெறமுடியும் வெளியூர் காரர்களிடம் டெண்டர் விண்ணப்பம் பெற முடியாது என கூறி காத்திருக்க வைத்து, மிரட்டி விரட்டியடித்துள்ளனர் .
அனைத்து தகுதி இருந்தும் முறையாக டிடி எடுத்து வந்த எங்களிடம் அதனை பெறாமல் தங்கள் ஆட்களை வைத்து குறைந்த டெண்டரில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட கூத்தாநல்லூர் நகராட்சி மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு இது போல் இனி நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment