திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மகாராஜபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஆரோக்கிய உணவுத் திருவிழா அனைவரின் கவனத்தைப் பெற்று பாராட்டுப் பெற்றது.

தமிழர்களின் பாரம்பர்ய உணவுகளான கேழ்வரகு கூழ், சர்க்கரைப் பொங்கல், புளி, கொண்டைக் கடலை, நிலக்கடலை, சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், பப்பாளி அல்வா என மகாராஜபுரம் ஊர் மக்கள் ஒவ்வொருவரும் அவர்களின் வீடுகளில் தயார் செய்து ஆரோக்கிய உணவுத் திருவிழாவினை நடத்தி, அருஞ்சுவையுடன் சமைத்து, விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் வழங்கி அசத்தினர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment