புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு இருந்த மாஸ் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு வந்திருக்கிறது இந்த இயக்கம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்க்காகவும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்காகவும் இவர்களால் அடையாளம் காட்டப்பட்டு, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர் அண்ணன் எடப்பாடியார் நிர்வாகிகள் அனைவரும் அண்ணன் எடப்பாடியார் தான் வர வேண்டும் என்று எண்ணினார்கள்.

ஒன்னரை கோடி பேர் தொண்டராக இருக்கக்கூடிய இந்த அதிமுகவிற்கு அதை 2 கோடி பேர் உறுப்பினர் ஆக்க வேண்டும் என அண்ணன் எடப்பாடியார் விருப்பப்பட்டு அனைத்து நிர்வாகிகளிடமும் பேசி அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வந்து கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த திருவாரூர் மாவட்டத்தில் தொகுதிக்கு 75,000 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் . மற்ற கட்சிகளில் எதிரிகள் மட்டும் தான் இருப்பார்கள் ஆனால் இந்த அதிமுகவிற்கு மட்டும்தான் எதிரியும் இருப்பார்கள் துரோகியும் இருப்பார்கள் எதிரியையும் துரோகியையும் ஒரே நேரத்தில் வெல்லக்கூடிய வல்லமை படைத்தது அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணன் எடப்பாடியார் வென்று காட்டி இருக்கிறார்.
இன்றைக்கு ஓபிஎஸ் இருக்கிறார் அவருடன் நான்கு , ஐந்து பேர் இருக்கிறார்கள் அவர்கள் யாருக்கு துணை போகிறார்கள் திமுகவிற்கு இது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிகிறது அதனால் தான் கட்சிக்காரர்களும் அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை கீழே உள்ள பொதுமக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. மீண்டும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள் என்றார் .
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட இளைஞர், இளம்பெண் பாசறை நிர்வாகிகள், நன்னிலம், குடவாசல் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
- செய்தியாளர் தருண்சுரேஷ்.
No comments:
Post a Comment