
இவ்விழாவினை முன்னிட்டு நேற்று இரவு பள்ளிவாசல் வண்ண, வண்ண, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இன்று அடியேக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ரம்ஜான் தின தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்வினை அடியற்கை ஒருங்கிணைந்த நபி வழி சகோதரர்கள் மற்றும் ஜமாத்தார்கள் ஏற்பாடு செய்து நபி வழியில் ஈதுல்ஃபித்ர் திடல் தொழுகை நடைபெற்றது. அனைவரும் முஸ்லிம் மக்களுக்கும் வெளிநாடுகளிலவாழும் தமிழ் மக்களுக்கும் மற்றும் அனைவரும் தர்ஹா சார்பில் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்து ரம்ஜான் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது அடியற்கை தவ்ஹீத் பேரவை NTF முஹம்மதியா மர்கஸ் மற்றும் ஒருங்கிணைந்த நபிவழி சகோதரர்கள் அஹ்மது சபியுல்வரா NTF மாவட்ட தலைவர், ஹாஜா நஜ்முதீன், அப்துல் ஜலீல், அஹ்மது கபீர், முஹம்மதியா மர்கஸ் லிட்டர் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் ரா.பிரியங்கா
No comments:
Post a Comment