விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் இன்று (ஏப்.1) காலை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இரவு தியாகராஜப் பெருமான் அஜபா நடனத்துடன் தேரில் எழுந்தருளினார். இந்த பெரிய தேரை இன்று காலை 7.30 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேர், கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக சென்று மாலையில் மீண்டும் நிலையை வந்தடையும்.

ஆழித் தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று (ஏப்.1) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவ குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. காவல் துறை சார்பில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் நான்கு வீதிகளிலும் 50 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள், 45 நடமாடும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 5 ட்ரோன் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் காவல் துறையினர் கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து திருவாரூருக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment