திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் வருடம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்களின் பொது ஏலம் நடைபெறும் என முன்னதாக பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (24.03.2023) காலை 10.00 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஏலம் நடைபெற்றது.

ஏலத்தில் 152 பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். மொத்தம் 40 வாகனங்களில் 34 இருசக்கர வாகனமும், 06 நான்கு சக்கர வாகனமும் அடங்கும். இறுதியாக 37 வாகனங்கள் (32 இருசக்கர வாகனம், 05 நான்கு சக்கர வாகனம்) சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு ஏலம் விடப்பட்டது.
அவ்வாறு ஏலம் விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.11,07,836/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment