திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாரத்திற்கு உட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த 21 இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் யூரியா தட்டுப்பாடு என்பது தொடர்ந்து இருந்து வருகிறது என்றும் தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுகிறது என்றும் குறிப்பாக 300 ரூபாய் விலை உள்ள யூரியாவை 850 ரூபாய் மதிப்புள்ள இடு பொருட்களை வாங்கினால் தான் தருவோம் என தனியார் உரைக்கடைகள் கூறி வருவதாக தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து புகார் வந்த வண்ணம் இருந்தது.
இந்தநிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், சீதக்கமங்களம், திருவீழிமிழலை ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடந்த 21 நாட்களாக யூரியா தட்டுப்பாடு நிலவி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் யூரியா கிடைக்காத காரணத்தினால் இளம் பயிர்களுக்கு உரம் இட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உட்பட்ட சுமார் 50,000 ஏக்கர் விளைநிலங்கள் யூரியா தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை மற்றும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் யூரியா தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து மாவட்ட வேளாண் அதிகாரகளிடம் கேட்டபோது ஒரு வாரத்தில் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.இருப்பினும் உரிய நேரத்தில் யூரியா தெளித்தால் தான் நெற்பயிர்கள் வளர்ச்சி என்பது சீராக இருக்கும் என்றும் ஏற்கனவே 21 நாட்கள் யூரியா கிடைக்காத சமயத்தில் இன்னும் ஒரு வாரம் ஆனால் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment