சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 December 2022

சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு.


திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுத மங்கலம் ஊராட்சி பகுதிக்குட்பட்ட சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில்  ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, நாகூர்,நன்னிலம்,நாச்சியார் கோவில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிகார்பாளையம் வளைவு சாலையில், வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சாலை தடுப்பாண்கள், பிரதிபலிப்பான் விளக்குகள், சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.



இவ்ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகா, நன்னிலம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், நன்னிலம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad