தற்சமயம் இளநிலை செயலக உதவியாளர், பிரிவு எழுத்தர்(LDC) மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகிய காலிபணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் ஒருங்கிணைந்த உயர்நிலை (10,+12) நிலைதேர்வு மூலம் இந்திய அரசின் அமைச்சகங்கள்.துறைகள் அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு அலுவலகங்கள் உட்பட பல்வேறு அலுவலகங்களுக்கு தேர்வு அறிவிப்பு www.ssc.nic.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது இதற்காக கல்விதகுதி 12வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமாது.இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க4.1.2023 இறுதிநாளாகும் விண்ணப்பகட்டனம் ரூ100ஐ ஆன்லைனில் செலுத்தலாம்.
மேலும் பெண்கள் பட்டியல் செலுத்துவதிலிருந்து விளக்களிக்கப்படுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். விண்ணப்பத்தார்கள் 1.1.2022ஆம் நாளன்று 18வயது முதல் 27வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் ஓ.பி.சி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. இந்த காலி பணியிடங்களுக்கு தேர்வு முறையில், கணினி அடிப்படையிலான தேர்வு 2 கட்டங்களாக நடைபெறும்.
ஆன்லைன் எழுத்துதேர்வு இந்தி மற்றும் ஆங்கிலமொழிகளில் நடத்தப்படும். எழுத்து தேர்வில் போது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொதுஅறிவு, பொதுவிழிப்புணர்வு, கணிதம்.ஆங்கிலம் அல்லது இந்தி ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை,இத்தேர்வுக்கு தயார் செய்யும் விதம், தேர்வுகளுக்கான நூல்கள் மற்றும் பாடகுறிப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வியாழக்கிழமை காலை11 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும் இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு, தொடர்ச்சியாக இலவச பயிற்சி வகுப்புகளும், மாதிரி போட்டிதேர்வுகளும் நடத்தப்படும் என தெரிவித்துக்கொள்ளபடுகிறது. எனவே திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் மேற்கொண்ட தேர்விற்கு நேரடியாக தாங்களே இணைய வழியாகவும் அல்லது இவ்வலுவகத்திற்கு வந்து இணைய வழியாகவோ விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மன்னார்குடி சாலை ஆர்.வி.எல் நகர் விளமல் திருவாரூர் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரிலோ அல்லது 04366-224226 என்ற எண்ணிற்கு தங்கள் விவரக்களை தெரிவித்தோ முன்பதிவு செய்து கொள்வதோடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் நாளன்று நேரில் வந்து கலந்து கொண்டு பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன். இ,ஆ,ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment