
இந்தத் திட்டத்தில் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீர்தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள பயனாளிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். ஆவணங்கள் கீழ்க்கண்ட ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா, அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம், சிறு, குறு விவசாயி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம் என கூறியுள்ளார்.
அதில் நன்னிலம் மற்றும் குடவாசல் வட்டாரத்தில் அணைப்பாடி, மகாராஜபுரம், அகலங்கன், கடுவங்குடி, திருமீயச்சூர், கொத்தங்குடி, செங்காந்தி, பேரளம், திருக்கோட்டாரம், கடகம், சுரைக்காயூர், ஆலத்தூர் மற்றும் வஸ்திராஜபுரம். மேற்குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ள குறிப்பிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment