ஒரு சில பள்ளமான இடங்களில் அமைந்துள்ள, விளைநிலங்களின் பயிர்கள், மழை நீரில் மூழ்கி, மெல்ல மழைநீர் வடிய, தொடங்கிய நிலையில், மழை நீரால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க, வேளாண்மை துறையின் விரிவாக்கம் மையங்கள், பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்கள் தந்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு பருவமழை, விவசாயத்தை பாதிக்கும் என்ற நிலையில், தமிழக அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன் பெற, கால நீட்டிப்பையும் செய்துள்ளனர். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கும், பாதிப்புகளை கணக்கீடு செய்வதற்கும், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு, தமிழக அரசு வழிகாட்டுதல் தந்துள்ளது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், தாசில்தார்கள், ஆர்டிஓக்கள், மாவட்ட வருவாய் நிர்வாகம், பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, மழை நீர் பாதிப்புகளை உடனுக்குடன் அறிந்து, அதற்கு ஏற்ப உடனடி தீர்வுகளை காண, வழிவகை காணப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை, பருவமழை துவங்குவதற்கு முன்பே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். தமிழக அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணம் என, நன்னிலம் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment