திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி உட்பட பகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா. காமராஜ் M.A., விஷ்ணுபுரம், இரவாஞ்சேரி. கடம்பகுடி, மருதவாஞ்சேரி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்பொழுது மருதவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் பழுதடைந்த நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தமையால் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதியதாக பேருந்து நிறுத்தம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டி தருவதாக மக்களிடம் வாக்குறுதி அளித்தார், இந்நிகழ்வில் சிபிஜி. அன்பழகன், நன்னிலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர், TCMF தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment