திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் உள்ள உண்டியல்கள் இன்று திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதில், மொத்தம் ரூ.6,41,516, 26 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக வந்துள்ளன.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இப்பழமையான வைணவத் தலத்தில் மொத்தம் 10 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை வழக்கமாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு கணக்கெடுப்பு செய்யப்படுகின்றன.
அதன்படி இன்று நடைபெற்ற உண்டியல் திறப்பு பணியில்,
-
இந்து சமய அறநிலையத் துறை நாகை மண்டல துணை ஆணையர் பா. ராணி,
-
கோவில் செயல் அலுவலர் எஸ். மாதவன்முன்னிலையில் தொகை எண்ணப்பட்டன.
பெரும் திரளான பக்தர்கள் தினமும் தரிசனம் வரும் இந்த கோயில், காணிக்கை வருவாய் அளவில் திருவாரூர் மாவட்டத்திலேயே முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
No comments:
Post a Comment