உலகளாவிய பொதுசுகாதார பாதுகாப்பில் தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெறும் தேசிய மருந்தியல் வார விழா (Nov 16–22) மன்னார்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 64வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தனியார் மருந்தியல் கல்லூரி மாணவ–மாணவியர்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
மன்னார்குடி தேரடி பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
-
தடுப்பூசி முக்கியத்துவம்
-
மருந்தாளுநர்களின் பங்கு
-
நோய் தடுப்பு மற்றும் மருந்து பாதுகாப்பு விழிப்புணர்வு
போன்ற செய்திகள் அடங்கிய பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
பேரணியில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ–மாணவியர்கள் கலந்து கொண்டு, நகரம் முழுவதும் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

No comments:
Post a Comment