மன்னார்குடி, நவம்பர் 07-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சமுதாயகரை கிராமத்தைச் சேர்ந்த அபிலேஷ் என்றவர் தனது வயலில் உரம் தெளித்து கொண்டிருந்தபோது, மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் என்பவர் அரிவாளும் வாளும் கொண்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் அபிலேஷ் தலை மற்றும் கையில் கடுமையாக காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அபிலேஷின் உறவினர்கள், குற்றவாளி அஜித் குமார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி, வாஞ்சூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் மன்னார்குடி–திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி நோக்கிச் செல்லும் சாலையில் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளி அஜித்தை தேட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்தனர்.
.jpg)
No comments:
Post a Comment