பயணிகள் கோரிக்கை வந்தால் திருவாரூர் வழியாக கம்பன் விரைவு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தகவல். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 6 November 2025

பயணிகள் கோரிக்கை வந்தால் திருவாரூர் வழியாக கம்பன் விரைவு ரயில் மீண்டும் இயக்கம் – தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் தகவல்.


திருவாரூர், நவம்பர் 06 -

திருவாரூர் ரயில் நிலையத்தை தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட பொது மேலாளர் பல்ராம் மேகி இன்று நேரில் ஆய்வு செய்தார். ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளைப் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது: “இந்த மாத இறுதியில் பணிகள் முடிந்தவுடன், திருவாரூர் ரயில் நிலையத்தை பிரதமர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பார்,” என்றார். அதே நேரத்தில், திருவாரூர்–காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் முடிந்தபின் நிறுத்தப்பட்ட கம்பன் விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.


அவர் கூறியதாவது: “அகல ரயில் பாதை என்பது பழைய மீட்டர் கேஜ் பாதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதுபோன்ற பாதையில் ரயில்களை இயக்குவது குறித்து பல துறை ஆய்வுகள் தேவைப்படுகிறது. இதுவரை பயணிகள் தரப்பில் இருந்து கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எதுவும் வரவில்லை. கோரிக்கை வைக்கப்பட்டால் அது குறித்து ஆலோசிக்கப்படும்,” என்றார்.


மேலும், திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசி டிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், தற்போது திருச்சி நோக்கி காலை 8.15 மணிக்குப் பிறகு மாலை 4.25 மணிக்கு மட்டுமே பயணிகள் ரயில் இயக்கம் உள்ளதாகவும், இடைப்பட்ட நேரத்தில் கூடுதல் ரயில் இயக்கம் குறித்து ஆலோசனை நடக்கிறது என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வில் ரயில்வே துறையின் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad