தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 360-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கும் கிடங்குகளுக்கும் அனுப்பி வைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை, கண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து இரவு பகல் பாராமல் லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சரக்கு இரயில் மூலமாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேவேளை, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒருபுறம் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்படும் வேகத்தில் இருக்க, மற்றொரு புறம் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை கொள்முதல் செய்வதும் அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தெரிவித்ததாவது: “தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் உணர்ந்து, அமைச்சர்களை களத்தில் அனுப்பி, உடனுக்குடன் நெல் கொள்முதல் நடைபெறும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் உடனடியாக இயக்கப்பட்டு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
.jpg)
No comments:
Post a Comment