பாலத்தினை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமல்லாது சுள்ளான் ஆற்றுக்கு தெற்கே உள்ள சுமார் 500 ஏக்கர் விளைநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் நெல்உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதற்கு பாலம் முக்கியமாக பயன்பாட்டுக்கு வந்தது.மேலும் வேளாண்மை பணிகளுக்கு டிராக்டர் மற்றும் அறுவடை இயந்திரங்கள் இந்தப் பாலத்தினை பயன்படுத்தி வந்தனர்.
வலங்கைமான் - குடவாசல் சாலையில் இருந்து கும்பகோணம்- மன்னார்குடி சாலைக்கு செல்லும் விதமாக இணைப்பு பாலமாக இந்த பாலம் பயன்பட்டு வந்தது.இந்நிலையில் காலப்போக்கில் பாலம் பழுதடைந்து பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் முற்றிலும் உடைந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் அச்சத்துடனே பாலத்தினை பயன்படுத்தி வந்தனர்.குறிப்பாக பள்ளி மாணவர்கள், முதியோர்கள் இந்த பாலத்தை கடக்கும் போது அச்சத்துடன் பயணித்தனர். இதனை அடுத்து பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 2022 -23நிதியாண்டில் சுள்ளான் ஆற்றில் ரூபாய் 2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளான் ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததையடுத்து அப்போது பாலம் கட்டும் பணி தாமதமானது. கடந்த சிலமாதங்களுக்கு முன்னதாக பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணியில் முதல் கட்டமாக பழுதடைந்த நிலையில் இருந்த பழைய பாலம் இயந்திரத்தின் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன, அதே பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இந்நிலையில் பணிகள் தற்போது 90 சதவீதம் பணிகள் முடிவு பெற்றுள்ளது.
பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் மற்றும் பாலத்திற்கான அணுகு சாலை உள்ளிட்ட சுமார் பத்து சதவீத பணிகள் மட்டுமே மீதம் உள்ளது. அப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment