திருவாரூர் நகராட்சியில் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நகராட்சி முகப்பு வாயிலில் தேசியக்கொடியினை நகர மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நகராட்சி பொறியாளர் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் போது நகர மன்ற உறுப்பினர்கள் இரா சங்கர் எஸ் என் அசோகன் எஸ் கலியபெருமாள் வாரை பிரகாஷ் வரதராஜன்சசிகலா ஆசை மணி விஜயலட்சுமி கமலாம்பாள் ஷகிலா பானு பெனாசிர் ஜாஸ்மின் உள்பட அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சியின் அனைத்து பிரிவு அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர்.
-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment