நூறு நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக அனைத்து ஊராட்சிகளும் தொடங்கிட வலியுறுத்தி நீடாமங்கலம் அருகே விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு கொடுத்து ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 28 June 2024

நூறு நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக அனைத்து ஊராட்சிகளும் தொடங்கிட வலியுறுத்தி நீடாமங்கலம் அருகே விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனு கொடுத்து ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.


2005ம் ஆண்டு ஜக்கிய முற்போக்கு கூட்டணி மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது  ஏழை, எளிய  மக்கள்  மற்றும்  விவசாய தொழிலாளர்கள்   பயன்பெறும் வகையில் நூறு நாள் வேலை திட்டத்தினை  அறிமுகபடுத்தி  ஊராட்சிகள் தோறும் நூறு நாளை் வேலை திட்டம் நடைபெற்றது.

ஆனால் 2015 ம் ஆண்டு முதல் பிஜேபி அரசு நூறு நாள் வேலை திட்டத்தை முடக்கும் வகையில் அதற்கான நிதியை முடக்கி வருகிறது  இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும்  விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில்   மக்கள் விரோத  மோடி அரசை  கண்டித்து பல்வேறு கட்ட போராட்டதி்ல் ஈடுபட்டு  வருகின்றனர்.


அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே  ஒளிமதி  ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஒரு நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக அனைத்து ஊராட்சிகளும் தொடங்க வேண்டும்.


சட்ட கூலி ரூ.319 குறைக்காமல் வழங்கிட வேண்டும், மண் சார்ந்த பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விரோத பாஜக மோடி  அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.


போராட்டத்திற்கு  பின்னர்  விவசாய தொழிலாளர்கள் ஊராட்சியில்  நூறு நாள் திட்டத்தை  தொடங்க வேண்டும் என கையெழுத்திட்டு மனுக்களை  ஊராட்சி  மன்ற தலைவரிடம் வழங்கினார்கள். குறிப்பாக  திருவாரூர் மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஊராட்சிகளி்ல் மனுக்கொடுக்கும் போராட்டத்தில்  அகில இந்திய விவசாய தொழிலாளர்  சங்கத்தினர்  ஈடுபட்டனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad