ஓடிசி - மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்களின் பிரதிநிதியாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்பட வேண்டும் - மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 30 June 2024

ஓடிசி - மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்களின் பிரதிநிதியாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்பட வேண்டும் - மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள்.


திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ம் பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார்  அரங்கில் நடைபெற்றது. இப்பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தல்,  சங்க நிதிநிலை அறிக்கை ஒப்புதல் பெறுதல், பொதுக்குழுவில்  தீர்மானங்கள் குறித்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


மேலும் மருந்துவணிகர்கள் சட்டத்தை மதித்து நடந்திடவேண்டும், வாடிக்கையாளர்கள் முக்கியமானவர்கள்  உள்ளிட்ட ஆலோசனைகள் எடுத்துரைத்தனர். அதனை தொடர்ந்து தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் மருத்துவர் அருண் மருந்து வணிகர்களிடம்  வரும் நோயாளிகளுக்கு முதலுதவியாக அளிக்கப்படும் மருந்துகள் எவ்வாறு வழங்கவேண்டும் என விளக்கம் அளித்தார்.


தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களாக - ஓடிசி - மருந்துகளை வகைப்படுத்தி அறிவிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவில் வணிகர்களின் பிரதிநிதியாக அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் சேர்க்கப்பட வேண்டும் , மருந்துவணிக அனுபவம் அற்றவர்கள் , மருந்து வணிக உரிமம் அற்றவர்கள் மூலம் சில்லறையாகவோ, மொத்தமாகவோ விற்பனை செய்யப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.


மின்அஞ்சல், ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்வதை முற்றிலும் தடுக்கவேண்டும். தமிழ்நாடு அரசு மருந்து வணிகர்களுக்கு அளிக்கும் மின்சார கட்டணத்தை வீட்டு உபயோக மின் கட்டண பட்டியலில் சேர்த்து மருந்து வணிகர்களுக்கு மின் சலுகை அளிக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்களாக நிறைவேற்றினர்.


இந்த பொதுக்குழு கூட்டத்தில்  மருந்து வணிகர்கள் சங்கம் திருவாரூர் மாவட்டத் தலைவர் லட்சுமணன், செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் நடராஜன் மற்றும் சிறப்புஉரை  மருந்து ஆய்வாளர் சுதர்சன், மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் ராஜதுரை,  காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர் டாக்டர் அருண், நிர்வாக இயக்குனர் பார்த்திபன் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள மருந்து வணிகர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


-திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad