தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம்நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசிய தேவைக்காக சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியே வருகின்றனர்.
அனல்காற்று மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பொதக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடா்ந்து பள்ளி , கல்லூரி , பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் , மோர் ,தர்பூசணி ,இளநீர், வெள்ளரி , நுங்கு உள்ளிட்ட பொருட்களை 25 நாட்களாக கூல் ஃபிரண்ட்ஸ் நண்பர்கள் மனித நேயத்துடன் வழங்கி வருகின்றனர்
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment