திருவாரூர் அருகே குடவாசலில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 20 April 2024

திருவாரூர் அருகே குடவாசலில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் திறந்து வைத்தார்.


திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  கலைமதி இணைந்து புதிதாக திறக்கப்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதலாவது வழக்கை நடத்தினர். 

பின்னர் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் பேசும்போது, தற்போதைய அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு வகையான நீதிமன்றங்களை தொடர்ந்து திறந்து வருகிறது. ஏழை எளிய மக்கள் நீதிமன்றங்களை நாடும்போது ஏற்படும் தாமதம் மற்றும் வழக்குக்கான செலவுகளை குறைப்பதற்காக அந்தந்த பகுதியில் நீதிமன்றங்களை அரசு  புதிதாகத் திறந்து வருவது பாராட்டுக்குரியது. ஏழை எளிய அடித்தட்டு மக்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது நீதித்துறை மட்டுமே.  


பொதுமக்களுக்கு நீதித்துறை மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரே ஒரு எண்ணத்தைக் கொண்டு நீதித்துறை செயல்படுகிறது. ஏழை எளிய மக்களின்  எதிர்பார்ப்புக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம் என உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad