101 வயதில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா - இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என பேட்டி* - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 19 April 2024

101 வயதில் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா - இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என பேட்டி*


நாடு முழுவதும் 18 வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கோயில் திருமாளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் தாய் மாமா தெட்சிணாமூர்த்தி தனது 101 வது வயதில் வாக்களித்தார்.


இந்தியா கூட்டணி  நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் வை. செல்வராஜ் தமிழ்நாடு முதலமைச்சரின் தாய் மாமாவை அழைத்து வந்து வாக்களிக்க உதவி செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வரின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என பேட்டி அளித்தார். 


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாகப்பட்டினம் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் வை செல்வராஜ்.. தமிழகத்தில் தளபதி மு க ஸ்டாலின் அறிவித்தது போல தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad