மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூத்தாநல்லூரில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பேட்டி. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 6 March 2024

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கூத்தாநல்லூரில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பேட்டி.


இந்தியா கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது கூட்டணியில்  உள்ள தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்  வருகின்ற மக்களவை  தேர்தலில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  திமுக  கூட்டணி  வெற்றி பெறும்  என கூத்தாநல்லூரில்  பாராளுமன்ற  உறுப்பினர்  நவாஸ்கனி  பேட்டி.

திருவாரூர்  மாவட்டம்  கூத்தாநல்லூரில்  ராமநாதபுரம்  மக்களவை உறுப்பினர்  கே.நவாஸ்கனி  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது திமுக இந்திய முஸ்லிம் லீக் கூட்டணி என்பது கொள்கை ரீதியான கூட்டணி தேர்தல் நேரத்தில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு கூட்டணி வைப்பது இல்லை.


இது கொள்கை ரீதியான கூட்டணி திமுக கூட்டணியில் எப்போதுமே முதன் முதலில் இந்திய முஸ்லிம் லீக் கூட்டணிக்கு தான் தொகுதியை ஒதுக்குவார்கள் அதன் அடிப்படையில் மீண்டும் ராமநாதபுரம் தொகுதியை எங்களுக்கு ஒதுக்கி உள்ளார்கள்.


ஐந்தாண்டு காலமாக ராமநாதபுரம் தொகுதியின் உடைய பாராளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.  திமுக கட்சியினுடைய திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது நிதி நெருக்கடி காலத்திலும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர்க்கு உரிமை தொகை திட்டம் புதுமைப்பெண் திட்டம் இப்படி பல்வேறு திட்டங்களை  கொண்டு வந்துள்ளார்.


தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  கடந்த 10 பத்தாண்டு கால ஆட்சி   பாரதிய ஜனதா கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு ஆட்சி மோடி ஒரு கேரண்டி என்று சொல்லி வருகிறார்.


ஏற்கனவே கொடுத்த கேரண்டி எல்லாம் என்னாச்சு இன மக்கள் தற்பொழுது பிரதமரை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக அறிவித்துவிட்டு இதுவரையிலும் யாருக்கும் வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு வழங்கவில்லை.


பாரதிய ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது  சிறுபான்மை மக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் இல்லை கடந்த பாராளுமன்ற தேர்தலை அதிமுக பாரதிய ஜனதா கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தது.


இவர்களை எதிர்த்து நின்று திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது அதிமுக, பாஜக   இவர்கள் மக்களவை தேர்தலில்  வெற்றி பெற முடியாது தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் போதை பொருட்களை ஓழிப்பதற்கான முயற்சியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு தீவிரமாக கவனம் செலுத்தி அதனை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் முழுமையாக போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக  கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளார்கள். தமிழகத்தை விட குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் அதிகமாக டன் கணக்கில் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது பிரதமர் மோடியின்  நண்பர் தான் துறைமுகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். 


அதில் பிரதமர் மோடி கவனம் செலுத்துவதில்லை  பி.ஜே.பி ஆளாத மாநிலத்தில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மூலம் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி  பி.ஜே.பி தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கிறார்கள்  ஒரு புனிதமான மாநிலம் தமிழ்நாடு இது  பெரியார் மண்  கண்டா வர சொல்லுங்க இந்த தொகுதி எம்பிஏ கையோடு கூட்டிட்டு வாங்க என எங்கு பார்த்தாலும் அதிமுகவின் தொழில்நுட்ப அணியினர் லித்தோஸ் ஒட்டி உள்ளார்கள்.


நோட்டீஸ் ஒட்டியவர்கள் தாங்கள் முழு விவரத்தையும்  அந்த நோட்டீஸில் பதிவு செய்திருக்க வேண்டும் செய்யவில்லை எந்த பகுதிக்கு வர சொல்கிறார்களோ அந்த பகுதிக்கு நாங்கள் செல்ல தயாராக இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளாக  ராமநாதபுரம்  தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளேன்.   


இந்திய  கூட்டணியில்   உள்ள கட்சித் தலைவர்கள்  அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள்.   இந்தியா கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக இருக்கிறது.  பாரதிய ஜனதா கட்சி பழைய மாதிரி (EVM  )இயந்திரத்தை  வைத்து 400 தொகுதிகளை கைப்பற்றுவதாக சொல்லி வருகிறது வேடிக்கையாக உள்ளது.   பாரதிய ஜனதா கட்சி வருகின்ற மக்களை தேர்தலில் படுதோல்வி அடையும் என தெரிவித்தார்.


 -செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad