பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் மீது ஒன்றிய பாஜக அரசு ராணுவம் மூலம் கொடூர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் விவசாயிகள் சிலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்பொழுது அவர்களை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் தர தரவென சாலையில் இழுத்துச் சென்று குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் திருவாரூர் ரயில் நிலையத்தில் நலத்திட்டங்கள் இன்று பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ள நிலையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- செய்தியாளர் தருண்சுரேஷ்
No comments:
Post a Comment