திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 12 February 2024

திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்


திருவாரூர் விஜயபுரம் வர்த்தக சங்கம் சார்பில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் நாகை புறவழிச் சாலையில் அமைந்துள்ள விஜயபுரம் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமை வகித்தார். திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் சி ஏ பாலு உள்ளிட்ட வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.


ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொண்டு அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் ஜவுளி நிறுவனம் காய்கறி கடை வியாபாரிகள் சங்கம் பழக்கடை சங்கம் தேனீர் நிலையம் ஹோட்டல் சங்கம் உள்பட வர்த்தக சங்கத்திற்கு உட்பட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இதில் போக்குவரத்து மாற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், வியாபாரிகள் இடையூறு இல்லாமல் செல்ல போக்குவரத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி  பேசினார்கள்.


அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயகுமார் பேசுகையில் விரைவில் சில தினங்களுக்குள் சரி செய்து தரப்படும் என தெரிவித்தார்.  கருத்தரங்கு கூட்டத்தில் நிகழ்வில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் நகர மன்ற வாரை பிரகாஷ் உள்பட அனைத்து சங்கப் பிரதிநிதிகள் தொண்டு அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


-செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad