திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சோழபாண்டி கடுக்காகாடு உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் எழுந்தருளிருக்கும் நொன்டி வீரப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை உடன் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்றது. இன்று காலை இரண்டாவது கால யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு பூர்ணாகதிக்கு பின்னர் கடம் புறப்பாடு நடத்தப்பட்டது.
பின்னர் கோவிலின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசத்திற்கு மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான சன்னதியில் நொண்டி விரப்ப சுவாமி, சப்தகண்ணியர், மற்றும் குதிரை வாகனம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தையும், அதனை தொடர்ந்து மகா அபிஷேகத்தையும் கண்டுகளித்து இறைவனது அருளைபெற்றனர்.
No comments:
Post a Comment