வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 January 2024

வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச பிரமோற்சவ விழாவை முன்னிட்டு, கடந்த 15-ஆம் தேதி கிராம தேவதைகள் அபிஷேக ஆராதாரையுடன், காஞ்சி பெரியவர் அவர்களின் குரு நமஸ்கார பூஜையும் 16-ஆம் தேதி கொடியேற்றமும், யாக சாலை பூஜை காலம்-1ம் தொடங்கியது. தொடர்ந்து தினசரி யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. 

வருகின்ற 22-ஆம் தேதி சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபோகமும், 24-ஆம் தேதி திருத்தேர் ஓட்டமும், 25-ஆம் தேதி புஷ்ப பல்லாக்கு, தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொள்கின்றார்கள்.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரிஅ. ரமேஷ், பரம்பரை அறங்காவலர் கே நடராஜன் & சகோதரர்கள், சென்னை ஜி சுப்பிரமணி மற்றும் உபயதாரர்கள், வலங்கைமான்ஸ்ரீ அருணாசலேஸ்வரர் நற்பணி மன்ற அறக்கட்டளைனர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad