தமிழக மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் என திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 January 2024

தமிழக மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய வேண்டும் என்று நோக்கத்தோடு புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார் என திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு.


திருவாரூரில் அதிமுக நிறுவனத் தலைவர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் புதுத்தெருவில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளரும் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 


அதனைத் தொடர்ந்து  திருவாரூர் நகருக்கு  உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதி அதிமுகவினர் ஏற்பாட்டில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேசியதாவது, தமிழக மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய வேண்டும்  இன்று நோக்கத்தோடு புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 


மக்களோடு மக்களாக பணியாற்றி அன்பை பகிர்ந்து கொண்டவர் புரட்சித் தலைவர் அவருடைய வழியில் புரட்சித்தலைவி அம்மா மற்றும் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளனர். 

மக்களின் புனிதர் புரட்சித் தலைவர் உருவாக்கிய கழகத்திற்கு தேய்பிறை இல்லாமல் வளர்ந்து வருகிறது. புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது வழியில் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி யார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நல்லாட்சி மீண்டும் வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.  


இந்த நம்பிக்கை வருகின்ற தேர்தல்களில் எதிரொலிக்கும் இவ்வாறு முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ பேசினார். முன்னதாக திருவாரூர் விளமல் பாலத்திலிருந்து மயிலாடுதுறை சாலை புதுத்தெருவில் அமைந்துள்ள புரட்சித் தலைவரின் திருவுருவ சிலை வரையில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. 


இந்நிகழ்வுகளில் மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி, மாவட்டக் கழக பொருளாளர் ஏ என் ஆர் பன்னீர்செல்வம், நகரக் கழக செயலாளர் ஆர்டி மூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர்கள் பி கே யூ மணிகண்டன், ஜி எஸ் செந்தில்வேல் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை, செயலாளர் எஸ் கலியபெருமாள் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரயில் டீ பாஸ்கர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம் ஆர் பாலாஜி 


மற்றும் தஞ்சை மண்டல மாவட்ட தகவல் பிரிவு செயலாளர் வி. சின்ராஜ், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தியாகராஜன், மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் கூரியர் மதிவாணன்,  ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் எம் ஜி ஆர் கருப்பையன்,  ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிபாசு,  முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தனபால்  உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad