தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமான எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் விரோதமான எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.


திருவாரூரில் நடைபெறும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகன பேரணி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே கொட்டையூரில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பி. சின்னராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் ம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார்  டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களை துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர் இதில் 13 மாதங்கள் பனி, வெயில் மழை என முப்பருவ காலங்களில் 714 பேர்கள் இறப்பு என வீரம் செறிந்த நிலையில் டெல்லி சாலைகளில் விவசாயிகளின் போராட்டம் நடந்துவந்த நிலையில் தான் மோடி அரசின் வாக்குறிதியை ஏற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.


ஆனால் இதுவரையிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை. வேளாண் விளைப்பொருட்களுக்கு C2+50 அடிப்படை குறைந்த பட்ச ஆதார விலை அறிவித்து சட்டமாக்கிட வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தல்.


மின்சார திருத்த சட்ட மசோதாவை ரத்து செய்தல், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியதை திரும்பப் பெற வலியுறுத்தியும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ். டி வரியை நீக்கவேண்டும் எனவும். விலைவாசி உயாவை கட்டுப்படுத்துதல், பொதுத்துறை மற்றும் அரசு துறை நிறுவனங்களை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலை தொடர்கிறது. 


இதனால் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. எனவும் மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பை குறைத்து ஒப்பந்த முறையில் பணி நியமனம் கிராமப்புற தொழிலாளர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேலை பறிக்க பட்டுள்ளதையும்,இட ஒதுக்கீடு மறுதளிப்பும், சட்டப்படி 11 லட்சம் பேருக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுக்க மறுத்து வருகிறது, அரிசிக்கு 5 % வரி. ஆனால் அம்பானி, அதானிக்கு வரிகள் மற்றும் கடன் தள்ளுபடி செய்து வருவதையும் கண்டித்தும் ஒரே மாதத்தில் தமிழகத்தின் தொடர் மழையினால் பாதிப்புக்குள்ளான 13 மாவட்டங்களில் மிகப்பெரிய பேரிடர் பேரழிவு தேசிய பேரிடராக அறிவிக்க மறுத்து வருதையும், ஆபத்துக்காலத்தில் உதவி கூட செய்யமறுக்கும்  மத்திய பாஜக மோடி அரசை கண்டித்தும் இன்று அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக கொட்டையிரிலிருந்து திருவாரூரை சென்றனர். இந்த பேரணியில் டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களுடன் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.


- செய்தியாளர் தருண்சுரேஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad