வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 January 2024

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு  அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை குமா.  கணேஸ்வதி தேசிய கொடி ஏற்றி வைத்து, தலைமை உரை  ஆற்றினார். 

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் பா. சிவனேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோம மாணிக்கவாசகம், பெற்றோர்  ஆசிரியர் கழக செயற்குழு தலைவர்  வி.சி. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் புருஷோத்தமன், செயற்குழு உறுப்பினர்கள் சிக்கந்தர், ஆனந்த், உதயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ் மாறன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆப்சாத் பேகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் செல்வராணி, நெடுஞ்செழியன், குலாம் மைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர்.  


நிகழ்வில் இப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி மறைந்த எஸ். வண்டரர் குழலி நினைவாக அவர் குடும்பத்தினர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவி சௌ. காயத்ரி, இரண்டாம் இடம் பிடித்த மாணவி தேவதர்ஷினி, மூன்றாம் இடம் பிடித்த மாணவி வித்தியா சரஸ்வதி ஆகியோருக்கு  முறையே ரூபாய் 3000, 2000, ஆயிரம் நிதி பரிசும், கேடயமும் வழங்கி சிறப்பித்தார்கள். 


அவ்வாறு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் இடங்கள் வென்ற  மு. பூமிகா, கே. கலைச்செல்வி, பூமிகா  ஆகியோரும் நிதி பரிசும், கேடயமும் பெற்றனர்.   நற்பண்புகளுடன் விளங்கும் மாணவிகளுக்கு  "பண்பின் நல்லாள்" விருதும் குழலி உதவும் கரங்கள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் மாணவிகள் நன் மதிப்பெண் பெற உழைத்த ஆசிரியர்களும் சிறப்பு செய்யப்பட்டனர். 


மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இதில் இடம் பெற்றன. தமிழ்  ஆசிரியை கனகாம்பிகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், நிகழ்ச்சியின் நிறைவாக உதவி தலைமை ஆசிரியை  வனிதா செந்தில்ராஜ் நன்றி கூறினார்.


- செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad